டவுண் உள உடல் முடக்க நோய்க்கூட்டு என்பது உடல், அறிவு சார் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும் ஒரு மரபணு நிலைமையாகும். இது ஏறத்தாள 800 உயிர் பிறப்புக்களில் ஒன்றில் இடம்பெறுகின்றது. டவுண் உள – உடல் முடக்க நோய்க்கூட்டுடைய தனிநபர்கள் வழக்கமான 46க்குப் பதிலாக 47 நிறமூர்த்தங்களைக் கொண்டிருப்பர்.
மூன்று மரபணு மாறுபாடுகள் டவுண் உள – உடல் முடக்க நோய்க்கூட்டை ஏற்படுத்த முடியும். கிட்டத்தட்ட 92% தடவைகள் டவுண் உள -உடல் முடக்க நோய்க்கூட்டு ஒரு தனிநபரின் சகல கலங்களிலும் மேலதிக நிறமூர்த்தம் 21 காணப்படுவதால் ஏற்படுத்தப்படுகின்றது. அத்தகைய தருணங்களில் முட்டையினது அல்லது விந்தினது வளர்ச்சியின்போது மேலதிக நிறமூர்த்தம் உருவாகின்றது. விளைவாக, கருக்கட்டிய முட்டையை உருவாக்கவென முட்டையும் விந்தும் ஒன்றிணையும்போது, இரண்டுக்குப் பதிலாக மூன்று நிறமூர்த்தம் 21கள் காணப்படுகின்றன. முளையம் வளர்கையில், ஒவ்வொரு கலத்திலும் மேலதிக நிறமூர்த்தம் மீண்டும் தோன்றுகிறது. சகல கலங்களிலும் நிறமூர்த்தம் 21இன் மூன்று பிரதிகள் காணப்படும் இந்நிலைமை முக்கூட்டு நிறமூர்த்த நிலை 21 – ற்ரைசோமி 21 (Trisomy 21) எனப்படும்.
ஏறக்குறைய 2-4% சந்தர்ப்பங்களில், டவுண் உள -உடல் முடக்க நோய்க்கூட்டு சித்திரவடிவு முக்கூட்டு நிறமூர்த்த நிலை – மொசாயிக் ற்ரைசோமி 21 (Mosaic Trisomy 21) இனால் ஏற்படுகின்றது. இந்நிலைமை எளிய முக்கூட்டு நிறமூர்த்த நிலை ற்ரைசோமி 21ஐ ஒத்தது. ஆனால் இதன்போது தனியாட்களின் சகல கலங்களிலுமன்றி, ஒருசிலவற்றிலேயே அந்த மேலதிக நிறமூர்த்தம் 21 காணப்படுகிறது. உதாரணமாக, கருக்கட்டப்பட்ட முட்டை சரியான எண்ணிக்கையிலான நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆரம்பகால முளைய வளர்ச்சியின் போதான நிறமூர்த்தப் பிரிகைப் பிறழ்வு காரணமாக, சில கலங்கள் ஒரு மேலதிக நிறமூர்த்தம் 21ஐப் பெறுகின்றன. இவ்வகையில் சித்திரவடிவு முக்கூட்டு நிறமூர்த்த நிலை மொசாயிக் ற்ரைசோமி 21இனால் டவுண் உள – உடல் முடக்க நோய்க்கூட்டினைப் பெற்ற தனிநபரொருவர் பொதுவாக சில கலங்களில் 46 நிறமூர்த்தங்களைக் கொண்டிருப்பார். ஆயினும் ஏனையவற்றில் 47 நிறமூர்த்தங்களை (மேலதிக நிறமூர்த்தம் 21 உட்பட) கொண்டிருப்பார். இந்நிலையில், மேலதிக நிறமூர்த்தம் 21 கொண்டுள்ள கலங்களின் விகிதாசாரத்திற்கேற்ப, உடலியல் பிரச்சினைகளின் எல்லை வேறுபடலாம்.
கனடாவில் பிறக்கும் ஒவ்வொரு 800-1,000 பிள்ளைகளில் 1 பிள்ளை டவுண் உள – உடல் முடக்க நோய்க்கூட்டு கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே மிகவும் அடிக்கடி இடம்பெறும் நிறமூர்த்த அசாதாரண நிலையாகும்.
• உள – உடல் முடக்க நோய்க்கூட்டு வழக்கமாகப் பிறப்பின்போது அல்லது சற்றே பின்னர் அடையாளம் காணப்படுகிறது. ஆரம்பத்தில் டவுன் உள உடல் முடக்க நோய்க்கூட்டு கொண்ட குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் உடலியல் இயல்புகளின் அடிப்படையிலேயே இக்கண்டறிதல் அமைகிறது. குறைந்த தசைத்திறம், உள்ளங்கையின் நடுவினூடாக ஆழமான ஒரு தனிக் கோடு, ஒரு சாடையான தட்டையான முகத் தோற்றம், கண்களுக்கு மேன்னோக்கிய சரிவு என்பனவற்றை இவை உள்ளடக்கும். இந்த நோய் கண்டுபிடிப்பு ஒரு நிறமூர்த்த பரிசோதனைக் கற்கை மூலம் (கரியோரைப்-karyotype) உறுதி செய்யப்பட வேண்டும். பருமன், எண்ணிக்கை, வடிவம் என்பவற்றின் அடிப்படையில் குழுக்களாக்கப்பட்ட நிறமூர்த்தங்களின் காட்சிப்படுத்தலை ஒரு ‘கரியோரைப்’ வழங்குகின்றது. குருதி அல்லது இழையக் கலங்களைப் பரிசோதிப்பதன் மூலம் நிறமூர்த்தங்கள் ஆராயப்படுகின்றன.
ரொறன்ரோ டவுன் நோய்க்கூட்டு சங்கம் (Down Syndrome Association of Toronto) – www.dsat.ca
Down Syndrome Association of Toronto உள – உடல் முடக்க நோய்க்கூட்டு கொண்ட பிள்ளைகளின் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
கனேடிய டவுன் நோய்க்கூட்டு சபை (Canadian Down Syndrome Society) – www.cdss.ca
The Canadian Down Syndrome Society (CDSS) எடுத்துரைப்பு, கல்வி மற்றும் தகவல்களை வழங்குவதனூடாகவும் பெற்றோரையும் தொழில் நிபுணர்களையும் இணைக்கும் ஒரு மூலவளமாகும்.
இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பொதுவான தகவல் வழங்கும் நோக்குடையது மட்டுமே.. ஒரு குழந்தையின் நோயைக் கண்டறியும் அல்லது அதற்குச் சிகிச்சை அளிக்கும் நோக்குடையதல்ல.
“தாமத விருத்தியுள்ளவர்கள்” என இனங்காணப்பட்ட சிறுவர்கள், அதே வயதுடைய வழக்கமான சிறுவர்களைவிட, ஒரு குறைவான வேகவீதத்தில் வளர முற்படுவர். வளர்ச்சியின் ஒரு பகுதியில் அல்லது பல பகுதிகளில் இது வெளித்தெரியலாம். வளர்ச்சியில் தாமதம் என்பது முன்பள்ளிச் சிறுவர்களை ஒரு ஆணித்தரமான அடையாளக் குறிப்புடன் அடையாளப்படுத்தத் தயங்கும் கல்வியாளர்கள், ஆரோக்கியத் தொழில் துறையாளர்கள் ஆகியோரால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆணித்தரமற்ற ஒரு அடையாளக் குறிப்பாகும். வழக்கமான வளர்ச்சியிலும்கூட, வளர்ச்சி மைல்கற்களுக்கான வயதெல்லைகள் உள்ளன. எனினும் பெரும்பாலான சிறுவர்கள் ஒவ்வொரு திறனையும் கைக்கொள்வதற்கென ஒரு குறிப்பிட்ட புள்ளி உண்டு.
இது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
ஒரு பிள்ளை ஏன் தாமதமான விருத்தியைக் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான பொதுவான காரணங்கள்:
ஒரு வளர்ச்சித் தாமதம் பின்வருவன போன்ற இன்னொரு கோளாறுடன் இணைந்து காணப்படுதல் அசாதாரணமானதல்ல:
வளர்ச்சித் தாமதம், முன்பள்ளிச் சிறார்கள் மத்தியில் வெகுசாதாரணமாக காணப்படும் இயலாமையாகும். பெண்பாலாருடன் ஒப்பிடும்போது ஆண்பாலாரிடத்தே இது அதிகம் காணப்படுகிறது. பாடசாலை அமைப்புக்குள் சிறுவர்கள் உட்செல்லும்போது பலரிடத்தும் மேலும் குறிப்பிட்ட இயலாமைகள் கண்டறியப்படுகின்றன. அநேகமான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வளரவளரமுன்னேற்றம் அடைகின்றனர். ஆயினும் அம்முன்னேற்றத்தின் வீதமும் இறுதி எல்லையும் தனிநபர்கள் மத்தியில் மாறுபடுகின்றது.
வழமைபோல் வளர்ந்துவரும் சிறுவர்களின் ஒழுங்குமுறையான பரிசோதனைகளின்போது, அவர்களது வளர்ச்சித் தாமதம் குறித்து, ஒரு குழந்தை வைத்தியர் கண்காணிக்க வேண்டும். ஒரு குழந்தையால் என்ன செய்ய முடியும் என்பது போன்ற எளிமையான கேள்விகளை இது கொண்டிருக்கலாம் அல்லது ஒரு முறையான மதிப்பீட்டுப் பரிசோதனை ஒன்றை உள்ளடக்கலாம்.
ஒரு தாமத வளர்ச்சியுடனான பிள்ளையில் வெளித்தெரியக்கூடிய பொதுவான பண்புகள்:
பிள்ளைகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள் எனப் பொருள்படும் Keep Kids Healthy – www.keepkidshealthy.com இணையத்தளம்
Keep Kids Healthy என்பது ஒரு மருத்துவ, பெற்றாரிய இணையத்தளமாகும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்குமான, குழந்தை வைத்தியரின் ஒரு வழிகாட்டியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளையின் வைத்தியரிடமிருந்து நீங்கள் பெறும் தகவல்களுக்கு, தடுப்புப் பராமரிப்பினூடான மேலும் சிறந்த ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான ஒரு பின்னிணைப்பாக இது ஆக்கப்பட்டுள்ளது.
கனடா பிள்ளை மற்றும் குடும்பம் – Child and Family Canada – www.cfc-efc.ca
Child & Family Canada ஒரு தனித்துவமான கனடிய பொதுசனக் கல்வி இணையத் தளமாகும். இலகுவாகச் சென்று பார்வையிடக்கூடிய இணையத்தளத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் பற்றிய தரமான, நம்பகரமான மூலவளங்களை வழங்கும்பொருட்டு, Child & Family Canada பதாகையின்கீழ் ஐம்பது இலாப நோக்கற்ற அமைப்புக்கள் ஒன்றுதிரண்டுள்ளன.
இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பொதுவான தகவல் வழங்கும் நோக்குடையது. ஒரு குழந்தையின் நோயைக் கண்டறியும் அல்லது அதற்குச் சிகிச்சை அளிக்கும் நோக்குடையதல்ல.
வட அமெரிக்காவில் நோய் கண்டறிதல் நோக்கங்களுக்காக இந்த வகையைச் சேர்ந்த ஒழுங்கீனங்கள் தற்போது ஊடுருவிப் பரவலாக்கம் கொண்ட விருத்திமுறைக் கோளாறுகள் (Pervasive Developmental Disorders –PDD ) – பிடிடி என்று இனம் காணப்படுகின்றன. (1994, Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fourth Edition, American Psychiatric Association). மிக அண்மைக் காலமாக, பிடிடி என்பது தன்வயப் பன்னிலைக் கோளாறு அல்லது ஏஎஸ்டி (Autism Spectrum Disorder or ASD) என்ற கலைச் சொல்லின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதனால் தொழில் நிபுணர்கள் அல்லது பெற்றோர்கள் வெவ்வேறு விதமான தன்வயநிலை பற்றிக் குறிப்பிடும் போது அடிக்கடி அவர்கள் தன்வயநிலையை பிடிடியை உள்ளடக்கும் வேறொரு பன்னிலைக் கோளாறுகளிலிருந்து பிரித்தறிகிறார்கள் என்பதாகும்.
ஏஎஸ்டி என்பதில் ஒரு நியமமான ‘வகை’ அல்லது ‘வகைமாதிரியான’ ஒரு நபர் என்பது கிடையாது. இந்த பன்னிலையில் உள்ளடங்கும் பிள்ளைகளை விபரிக்க தன்வயம் போன்ற( autistic-like), தன்வயத் தன்மைகள்.(, autistic tendencies), தன்வயப் பன்னிலை (autism spectrum), மற்றும் உயர் செயல்பாடுடைய( high-functioning)அல்லது குறைந்த செயல்பாடுடைய தன்வயநிலை ( or low-functioning autism)போன்ற வெவ்வேறு சொற்களைப் பெற்றார் கேட்கக்கூடும். இருப்பினும், தன்வயப் பன்னிலைமையின் கீழ் வரும் தனிநபர்கள்; தொடர்பாடல், சமூக மற்றும் புலனுறுப்புக் குறைபாடுகளில் சில பொதுவான தன்மைகளைக் காண்பித்தாலும் அதன் தீவிரம், அறிகுறிகளின் எண்ணிக்கை அல்லது இந்நிலைமை தோற்ற ஆரம்பித்த வயது, போன்றவற்றில் மாறுபடவும் கூடும்.
ஏஎஸ்டி என்ற ஒரு குடைச்சொல் பின்வரும் நோய் கண்டறிதல்களை உள்ளடக்கும்:
தன்வய நிலைக்கான ஒரு குறிப்பிட்ட காரணம் தெரிந்திராவிட்டாலும், தற்கால ஆய்வுகள் தன்வய நிலையை மூளையின் உயிரியல் அல்லது நரம்பியல் மாற்றங்களுடன் தொடர்புபடுத்துகின்றன. பல குடும்பங்களில் தன்வயம் அல்லது அதனுடன் தொடர்பான இயலாமைகள் ஒரு வடிவமைப்பில் காணப்படுகின்றன. இந்த ஒழுங்கீனத்திற்கு ஒரு பரம்பரையியல் அடிப்படை உள்ளது என்பதையே இது குறிப்பிடுகின்றது. இருப்பினும் இந்த வேளையில் எந்த ஒரு பரம்பரை அலகும் நேரடியாக தன்வயத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. இந்த பரம்பரையியல் அடிப்படை மிகவும் சிக்கலானதும் பல பரம்பரை அலகுகளை ஒன்றிணைத்ததாகவும் இருக்கலாம் என ஆய்வாளர்களால் நம்பப்படுகின்றது.
தன்வயம் என்பது மூளையின் தொழிற்பாட்டினைப் பாதிக்கும் ஒரு நரம்பியல் ஒழுங்கீனத்தின் விளைவாகும். தன்வயம் என்பது ஒரு பன்னிலைக் கோளாறு ஆகும். அதாவது, தன்வயத்தின் அறிகுறிகளும் தன்மைகளும் பல் வேறுபட்ட ஒருங்கிணைப்புகளுடன், சாதுவானது முதல் தீவிரமானது வரை தம்மைக் காண்பிக்கலாம். ஒரேவிதமான நோய் கண்டறிதலுடன் இருக்கும் இரு பிள்ளைகள் ஒருவரிலிருந்து ஒருவர் மிகவும் வேறுபட்ட வகையில் நடந்து கொள்வதுடன் பல வேறுபட்ட திறன்களையும் கொண்டிருக்கலாம்.
ஏஎஸ்டி – தன்வயப் பன்னிலைக் கோளாறு நிலைக்குட்பட்ட பிள்ளைகள் 24 முதல் 30 மாதம் வரையிலான தமது விருத்தியில் ஒரே வகைமாதிரியாகவே அநேகம் காணப்படுவார்கள். அந்த காலப்பகுதியில் பெற்றோர்கள் மொழியில், விளையாட்டில் அல்லது சமூக ஊடாட்டத்தில் பின்தங்கிய நிலையை அவதானிக்கக்கூடும். பின்வரும் தாமதங்கள் எதுவும், தனிப்பட்ட முறையில் ஏஎஸ்டி என்ற நோய்நிலையைக் கண்டறியும் முடிவினைத் தரமாட்டா. தன்வயம் என்பது பல விருத்திநிலைச் சவால்களின் கூட்டுச் சேர்க்கையாகும்.
ஏஎஸ்டிகளுடன் தொடர்பான சில பொதுவான தனிக்குணங்கள் உள்ளன.
1. குறைபாடுள்ள தொடர்பாடல் – impaired communication
உ-ம்: மொழி மிக மெதுவாக விருத்தி அடையும் அல்லது அறவே விருத்தியடையாதிருக்கும்;: சொற்கள் அதன் வழமையான பொருளுடனல்லாது பயன்படுத்தப்படும்: சொற்களுக்குப் பதிலாக உடல் சைகைகள் பயன்படுத்தப்படும்: எக்கோலாலியா (கதைக்கும் மொழி மீண்டும் மீண்டும் கூறப்படுதல்) காணப்படும்: செயற்பாடற்ற மொழி அல்லது மீண்டும் மீண்டும் கூறப்படும் ‘எழுதப்பட்டது போன்ற வசனமொழி’ காணப்படும்.
2. சமூக உறவாடல்களிலும் விளையாட்டுத் திறன்களிலும் பிரச்சினைகள் – problems with social relationships and play skills
உ-ம்: மற்றவர்களுடனல்லாது தனிமையிலேயே நேரத்தைச் செலவிடுதல்: நண்பர்களைச் சம்பாதிப்பதில் குறைந்தளவான ஆர்வம் காட்டுதல்: சமூக அறிகுறிகளான கண்ணோடுகண் நோக்கல் அல்லது புன்னகைகளுக்குக் குறைந்தளவிலான எதிர்தாக்கம் காட்டல்: குறைந்தளவிலான அல்லது அறவே அற்ற கண்நோக்கல் காண்பித்தல்: உடல் ரீதியான சமூக தொடர்புகளை (அரவணைப்புகள், கைகளைப் பற்றிக் கொள்ளல் போன்றன) மிகவும் விரும்புதல் அல்லது தவிர்த்தல்: தன்னிச்சையான அல்லது கற்பனையான விளையாடல் காணப்படாதிருத்தல்: அசைவுகளைப் பாவனை பண்ணும் திறன்கள் குறைந்தளவில் இருத்தல்: குறைந்தளவு நேரமே கவனம் செலுத்தும் தன்மை
3. வகைமாதிரியான/திரும்பச் செய் நடத்தைகள் – engagement in stereotypical/repetitive behaviours
உ-ம்: விளையாட்டுப் பொருட்களை வரிசையாக அடுக்குதல்: உடலைச் சுற்றுதல்/சாய்மானமாக அசைத்தல்: கைகளை செட்டைகள் போல் அசைத்தல்/அடிக்கடி செய்தல்: முழுஉடலாலான அசைவுகளை ஒழுங்குமுறையில் மீண்டும் மீண்டும் செய்தல்: அதீத துடினம் அல்லது மிக அமைதியாக இருத்தல்: ஒரு குறிப்பிட்ட காரணம் ஏதுமின்றி பிடிவாதம்-அடம் பிடித்தல்: ஒரே பொருளில், யோசனையில் அல்லது நபரில் அதீதமான ஆர்வம்: வழமையான ஒழுங்கு முறைகளில் மாற்றங்களை ஏற்பதில் சிரமத்தைக் காண்பித்தல்
4. புலன்களில் குறைபாடு – sensory impairment
உ-ம்: பார்வை, கேட்டல், தொடுகை, மணம், மற்றும் சுவை என்பவற்றில் அதிகளவிலான அல்லது குறைந்தளவிலான உணர்ச்சியுடையதாயிருத்தல்
பிரபலமான விளக்கத்திற்கு மாறாக, ஏஎஸ்டி கொண்டுள்ள பல பிள்ளைகள் கண்ணோடுகண் நோக்கக்கூடும், பாசத்தைக் காட்டக்கூடும், புன்னகைக்கவும் மற்றும் சிரிக்கவும் பல வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் – வெவ்வேறு அளவுகளிலேனும் காட்டக்கூடும். ஏனைய பிள்ளைகளைப் போல இவர்களும் தமது சூழலுக்கு நல்லவிதமாகவும் எதிர்மறையாகவும் பதில்குறி அளிக்கலாம். ஏஎஸ்டி ஆனது அவர்களது எதிர்தாக்கத்தின் வகைகளைப் பாதிக்கக்கூடும் என்பதுடன் தமது உடல்கள்; மனங்கள் எவ்வாறு எதிர்த்தாக்கங்களை வழங்கும் என்பதைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடும். சிலசமயங்களில் பார்வை, உடல் அசைவு மற்றும்/அல்லது செயல்முறை பிரச்சினைகள், மற்றவர்களோடு கண்ணோடு கண் நோக்குதலைத் தொடர்ந்து செய்வதில் சிரமதத்தை ஏற்படுத்தும் (ஏஎஸ்டி கொண்ட சில தனிநபர்கள் வேறுநபர்களை நேரடியாக நோக்குவதிலும் பார்க்கத் தமது சுற்றுவட்டப்பார்வையைப் பயன்படுத்துவார்கள்). ஏஎஸ்டி கொண்ட நபர்களுக்கு சிலவேளைகளில் மற்றவர்களது தொடுகை அல்லது நெருக்கம் வலியை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும் என்பதால் குடும்ப அங்கத்தவர்களிலிருந்து கூட அவர்கள் விலகி இருப்பதை இது உருவாக்கக்கூடும். உலகத்தை ஒரு ஒழுங்குமுறையான வகையில் ‘புரிந்து கொள்வது’ இயலாமற்போவதனால் அந்தரம், பயம் மற்றும் குளப்பம் என்பன ஏற்படலாம்.
ஏஎஸ்டி கொண்ட ஒவ்வொரு நபரும் ஒரு தனிநபர் என்ற வகையில் ஏனைய தனிநபர்களைப் போலவே தனித்துவமான ஆளுமை மற்றும் சிறப்பியல்புகளின் கூட்டுச்சேர்க்கையைக் கொண்டிருப்பார்கள். ஏஎஸ்டி கொண்ட நபர்களிடம் பாரிய வேறுபாடுகள் இருக்கும். மிகக்குறைவான அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மொழியில் சிறிதளவு தாமதத்தையும் சமூக ஊடாட்டங்களில் பாரியளவில் சவால்களை எதிர்நோக்கவும் கூடும். இந்தத் தனிநபர் ஒரு உரையாடலை ஆரம்பிக்கவும் மற்றும்/அல்லது அதைத் தொடர்வதிலும் சிரமம் கொண்டவராக இருக்கலாம். இவர்களது தொடர்பாடல் மற்றவர்கள் மீது பேசுவதாக விபரிக்கப்படுகின்றது (உதாரணத்திற்கு மற்றவர்கள் தமது கருத்துக்களைக் கூற முற்பட்ட போதிலும் அது தமக்குப் பிடித்தமாக ஒரு விடயம் பற்றியதான தனிக்கதையாகவே தொடரும்). ஏஎஸ்டி உடையவர்கள் வெளிப்புற மற்றும் உட்புற தகவலை தனித்துவமான முறைகளில் உள்வாங்கிக் கிரகித்துப் பதிலிறுக்கின்றார்கள்
ஏஎஸ்டி ஆனது பெண்குழந்தைகளைவிட நான்கு மடங்களவில் ஆண் குழந்தைகளில் காணப்படுகின்றது. இது எல்லா இன, இனத்துவ, சமூக, குடும்ப வருமான, வாழ்க்கை முறை மற்றும் முறைசார்ந்த கல்வி மட்ட பிரிவுகளைச் சார்ந்த நபர்களையும் உள்ளடக்குகின்றது. ஏஎஸ்டி மற்றும் அது தொடர்பான நடத்தைகள் 500ல் ஒரு நபருக்கு ஏற்படுக்கூடும் என்று அண்ணளவாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தன்வயத்தினை நோயாகக் கண்டறியக்கூடிய ஒரு மருத்துவ ரீதியான பரிசோதனைகளும் கிடையாது. ஒரு திருத்தமான நோய்நிலை கண்டறிதல் என்பது ஒரு தனிநபரின் தொடர்பாடல், நடத்தை, மற்றும் விருத்திநிலைகள் பற்றிய அவதானிப்பின் அடிப்படையில் அமைய வேண்டும். ஏனெனில் தன்வயத்துடன் சம்பந்தப்பட்ட பல நடத்தைகள் வேறு பல ஒழுங்கீனங்களுடனும் பகிரப்படுகின்றதனால் பல் வேறு மருத்துவப் பரிசோதனைகளும் கோரப்படலாம். இதன் மூலம் சில விடயங்கள் இல்லை எனத் தீர்மானிக்கவும் இந்த அறிகுறிகளுக்கான வேறு காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இந்த ஒழுங்கீனத்தின் சிறப்பியல்புகள் மிகவும் வேறுபடுவதனால் ஒரு நரம்பியலாளர், மனவியலாளர், விருத்திநிலைசார் சிறப்பு குழந்தைவைத்திய நிபுணர், பேச்சு-மொழிவள சிகிச்சையாளர், கற்றல் ஆலோசகர் அல்லது ஏஎஸ்டி பற்றிய அறிவு கொண்ட வேறு தொழில் நிபுணர்கள் போன்றோர் உட்பட்ட பல்துறை நிபுணர்கள் குழுவொன்றினால் ஒரு பிள்ளை பரிசீலிக்கப்பட வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி கொண்ட அல்லது குறைந்தளவான அனுபவம் கொண்ட தொழிற்பயிற்சியாளர்களுக்கு நோயறிகையில் சிரமம் இருப்பதுடன் நல்ல நோக்கம் கொண்ட நிபுணர்கள் கூட இதனைத் தவற விடவும் கூடும். ஏஎஸ்டி பற்றிய கண்டறிதல் மற்றும் அங்கீகாரத்தில் உள்ள சிரமங்கள் இந்த ஒழுங்கீனங்களைக் கொண்ட தனிநபர்களது சிக்கலான தேவைகளுக்கான சேவைகளைப் போதியளவில் பெற்றுக்கொள்வதில் தடைகளை ஏற்படுத்தக்கூடும்
விரைவானதொரு நோயறிகைக்கான எந்தவொரு வகைமாதிரியும் கிடையாது. ஒரு தனிநபரது திறமைகள் மற்றும் நடத்தைகள் பற்றிய உண்மையான புரிந்துணர்வைப் பெறுவதற்கு பெற்றோர் மற்றும் வேறு பராமரிப்பாளர்களது தகவல் உள்ளீடு மற்றும் விருத்திசார் வரலாறு என்பன மிக முக்கியமாகும். ஏஎஸ்டி கொண்ட சில நபர்கள் பிறவிக் குறைபாடு, ஒரு நடத்தை ஒழுங்கீனம், செவிப்புலன் பிரச்சினைகள் அல்லது வினோதமான மற்றும் தீவிரமான நடத்தைகூட கொண்டவராகக் காணப்படலாம்.
ஒரு திருத்தமான நோயறிகையும் நோயறிகையும் ஆரம்பத்திலேயே கண்டறிதலும் ஒரு பொருத்தமானதும் பயன்மிக்கதுமான கல்விசார் மற்றும் குறுக்கீட்டுத் திட்டத்தினை உருவாக்குவதன் அடித்தளத்தினை வழங்கும். துரதிஷ்டவசமாக ஏஎஸ்டி பற்றிய தேவைகள் மற்றும் ஆரம்பக் குறுக்கீட்டு வாய்ப்புகள் பற்றிய அறிவு அற்ற சில தொழில் நிபுணர்கள் ஒரு நோயறிகை முடிவினை வழங்குவதில்லை. அவர்களது இந்தத் தயக்கம் பொருத்தமான நிதி உதவி மற்றும் சேவைகள் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம்.
தன்வயத்திற்கான ஜெனீவா மையம் – Geneva Centre for Autism – www.autism.net
தன்வயத்திற்கான ஜெனீவா மையம் என்பது நேரடியான சிகிச்சைச் சேவைகளை (பீல், ஹோல்ரன், சிம்கோ மற்றும் யோர்க் பிராந்தியங்கள் உட்பட்ட) ரொறோன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கும் ஒரு பன்முகச் சேவை முகவர் நிலையமாகும். அவர்கள் மேலும் தகவல், மூலவளங்கள், ஆலோசனை மற்றும் பயிற்சிச் சேவைகளையும் தன்வயப் பன்னிலைக் கோளாறுகள் -Autism Spectrum Disorders (ASD) கொண்ட தனிநபர்கள், பெற்றோர்கள், சேவை வழங்குனர்கள், கல்விப்பயிற்சியாளர்கள் மற்றும் வேறு தொழில் நிபுணர்களுக்கும் ஒன்ராறியோ, கனடா மற்றும் சர்வதேச ரீதியில் வழங்குகின்றனர்.
ஒன்ராறியோ தன்வயச் சபை (ஏஎஸ்ஓ) – Autism Ontario – www.autismontario.ca
தன்வயம் பற்றியும் தன்வயம் கொண்ட தனிநபர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களோடு இணைச்செயற்பாட்டில் தொடர்புபடும் தொழில் நிபுணர்கள் தினசரி எதிர்நோக்கும் விடயங்கள் பற்றியும் பொதுமக்களது விழிப்புணர்வினை அதிகரிக்க ஏஎஸ்ஓதன்னை அர்ப்பணித்துள்ளது.
விசேட தேவைகள் வாய்ப்புச்சாரளம் – Special Needs Opportunity Windows – https://snow.idrc.ocadu.ca/
இந்த விசேட தேவைகள் வாய்ப்புச் சாளரம் அல்லது ‘ஸ்நோ’ செயல்திட்டம் எனப்படுவது கணினி வழியான மூலவளங்களையும் தொழில் சார்ந்த விருத்தி வாய்ப்புகளையும் விசேட தேவைகள் கொண்ட மாணவர்களது கல்விப் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்குகின்றது.
கணினி வழியான அஸ்பேஜர்ஸ் நோய்க்கூட்டு பற்றிய தகவல் மற்றும் ஆதரவு– Online Asperger Syndrome Information and Support – www.udel.edu/bkirby/asperger/
அஸ்பேஜர்ஸ் நோய்க்கூட்டு பற்றிய தகவல் மற்றும் இணைப்புக்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கின்றன.
‘டுருலேர்ண்’கற்பதற்குச் செய்யுங்கள் எனப்பொருள்படும் இணையத்தளம் – Do2Learn – https://do2learn.com/
விசேட கற்கைத் தேவைகள் கொண்ட பிள்ளைகள் மற்றும் வயதுவந்தோரில் சுதந்திரமான நிலைமையை ஊக்கப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை வழங்கும் இணையத்தளமாகும்.
பெற்றோர்புத்தகங்கள் – Parentbooks – www.parentbooks.ca
குடும்பத்தைத் திட்டமிடல் முதல் பெற்றோராயிருத்தலிலுள்ள தினசரி விடயங்கள், எல்லாவகையான விசேட தேவைகள் வரை எல்லா இடங்களிலிருந்தும் முற்றிலும் ஒன்றுதிரட்டப்பட்ட மூலவளங்களை வழங்குகின்றது இந்த பெற்றோர்புத்தகங்கள் என்ற இணையத்தளம். பராமரிப்பாளர்கள், ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள், கல்விப்பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றோருக்குமான மூலவளத் தெரிவுகளையும் இது கொண்டுள்ளது.
இந்தப் பத்திரத்திலுள்ள உள்ளடக்கம் பொதுவான தகவல் வழங்கும் நோக்கங்களுக்கானதே. ஒரு பிள்ளையினது நோயைக் கண்டறிவதோ அல்லது சிகிச்சையளிப்பதோ அதன் நோக்கமல்ல.